எண்ணச் சிதறல்கள் ஒராயிரம்.
மயக்கக் குவியலில் வாழ்க்கை பயணம்!
பிணி, கவலை மடிப்பில் கசங்கிய துணியாய் நான்..
கலங்கரை வெளிச்சம் வருமா? தணியா தாகம்!
மருங்கிய வாழ்வில் அறிவே துணையாய்
அமைதி நிலையில் தினந்தினம் தவம்.
நீ இன்னும் கரையில் இல்லை!
அலையை கடந்து ஆழ்கடல் பயணம்…
கருணை கடலாம் கருநிற வெளியில்
தெளிவும், திறனும் அனுபவ உணர்வாய்
தினந்தினம் கொடுக்கும் ஒரு வள்ளல்!!
எளியன், வறியன், பழியன் என எண்ணாது
எனக்கும் அருளும் கடையன் ஒருவன்!
முயற்சி முயற்சி முடிவிலா முயற்சி, இனி
மருங்கிய நிலையும் மயக்கமும் வாரா!